tamilnadu

img

சிபிசிஐடி இயக்குநர் ஜாபர் சேட்  பணியிடமாற்றம்

சென்னை:
சிபிசிஐடி இயக்குநராக இருந்த ஜாபர் சேட் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய் வுத் துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள் ளார். முக்கிய பல வழக்குகளை விசாரித்து வந்த நிலையில், ஜாபர் சேட் பணியிடமாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.மற்றொரு சீனியர் ஐபிஎஸ் அதிகாரி, பிரதீப் வி.பிலிப் சிபிசிஐடி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபியாக பதவி வகித்தவர்.  புதனன்று இருவரும் புதிய பதவிகளை ஏற்க உள்ளனர்.2019 ஆம் ஆண்டு சிபிசிஐடி இயக்குநராக ஜாபர் சேட் நியமிக்கப்பட்டார். இதுவரை அதே பதவியில் அவர் தொடர்ந்து வந்தார். இந்த பொறுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்தில் உள்ள முக்கிய பெரிய வழக்குகளை விசாரிக்கக் கூடிய அமைப்பாக சிபிசிஐடி செயல்பட்டு வருகிறது.டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு, குரூப்-1, குரூப்-2 தேர்வு முறைகேடு உள்ளிட்ட வற்றை சிபிசிஐடிதான் விசாரித்து வருகிறது. இவற்றையெல்லாம் விசாரித்து வந்த
தில் முக்கிய பங்காற்றியவர் ஜாபர் சேட். இந்த நிலையில் இவரது பணியிடமாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.

;