tamilnadu

சாதிவாரி கணக்கெடுப்பு: ஆணையம் அமைப்பு....

சென்னை;
சாதிவாரி புள்ளிவிவரங்களை சேகரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   இந்நிலையில் குலசேகரன் தலைமையிலான ஆணையம் உடனே செயல்பாட்டுக்கு வருவதோடு விரைவில் பணி தொடங்கும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வழக்கை எதிர்கொள்ளத் தேவையான புள்ளிவிவரத்தைப் பெற ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும்; சமூக நிதியை நிலைநாட்டத் தேவையான பணிகளை மேற்கொள்ளவும் ஆணையம் அமைக்கப்படுகிறது எனவும் முதலமைச்சரின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.