tamilnadu

img

சாதி மறுப்பு திருமணம்

புதுச்சேரி,ஆக.11- தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் முன்னிலையில் சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. புதுச்சேரி அரியாங்குப்பத்தை அடுத்து உள்ள நோனாங்குப்பத்தை சேர்ந்த கருணாநிதி - வசந்தா ஆகியோரது மகன் பன்னீர்செல்வம். அரியாங்குப்பத்தை சேர்ந்த அருந்ததிபுரத்தை சேர்ந்த ஆண்டவர்-புஸ்பா தம்பதியரின் மகள் மாரியம்மாள் இவர்கள் இருவரும் கல்லூரி படிக்கும்போதே ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.  சுமார் 8ஆண்டுகளாக பழகி வந்தவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெற்றோர்களை அனுகியுள்ளனர். வேறு சமூகத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் உறவினர்கள், அருந்ததி சமூகத்தை சேர்ந்த மாரியம்மாளை திருமணம் செய்வதற்கு சம்மதம் அளிக்கவில்லை. இந்நிலையில்  இது குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்களின் தலைமையில் திருமணம் செய்வதற்கு மணமக்கள் இருவரும் சம்மதித்தனர். அதன்படி புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் திருமண விழா ஆகஸ்ட் -9ல் நடைபெற்றது. புதுச்சேரி பிரதேசத் தலைவர் நிலவழகன் தலைமையில் நடைபெற்ற விழாவில், பொதுச்செயலாளர் ராமசாமி, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் வழக்கறிஞர்கள் தட்சணாமூர்த்தி, சரவணன், முன்னணியின் புதுச்சேரி நிர்வாகிகள் ரமேஷ், கொளஞ்சியப்பன்,அரிகிருஷ்ணன், தெய்வசிகாமணி, மதிவாணன், உலகநாதன், மற்றும் மணமக்களின் உறவினர்கள் திருமணவிழாவில் பங்கேற்றனர். சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட மணமகன் பன்னீர்செல்வம் மத்திய ரிசர்வு படையில் காவலராகவும், மணமகள் மாரியம்மாள் தமிழக காவல்துறையில் காவலராகவும் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

;