tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மோடிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!
காங்கிரஸ் கட்சி தொடர்ந்தது

சென்னை, மே 8- பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்  சாரத்தின் போது அப்பட்டமாக மதவெறி யைத் தூண்டி விடுவதாக எதிர்க்கட்சி கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.

அதில், தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்லும் ஒவ்வொரு இடத்திலும், வெறுப்  புணர்வை விதைத்து, மதக்கலவரத் தைத் தூண்டும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு உள்ளது. இதுகுறித்து முறையாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தேர்தல்  ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று  செல்வப்பெருந்தகை வலியுறுத்தி யுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கறிஞர்கள் சூரியபிரகாசம், விக்  டர் ஆகியோர் ஆஜராகி, பிரதமர் பெயரை சேர்த்துள்ளதால் வழக்கிற்கு  எண்ணிட மறுப்பதாக புகார் தெரிவித்த னர். இந்த வழக்கை எண்ணிட்டு உடனடி யாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதையடுத்து நீதிபதிகள், மனுவில்  குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் மனு தாக்கல் செய்யுங்கள், விசா ரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என  தெரிவித்துள்ளனர்.

எடைக் குறைப்பு சிகிச்சை
மருத்துவமனையை  மூட உத்தரவு

சென்னை, மே 8- சென்னையில் உடல் எடைக் குறைப்பு அறுவை சிகிச்சையின்போது, புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவ காரத்தில், அறுவை சிகிச்சை மேற் கொண்ட தாம்பரத்தில் உள்ள பம்மல்  டிபி ஜெயின் தனியார் மருத்துவமனை யை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை  உத்தரவிட்டுள்ளது. இந்த மருத்துவ மனையை அதிகாரிகள் ஆய்வு செய்த தில் அவசரகால மருத்துவர்கள், கருவி கள் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட துடன், அறுவைச் சிகிச்சைக்கு முன்பு  பெற்றோர்களிடம் உரிய தகவலை தெரி வித்து கையெழுத்து பெறவில்லை என வும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் மீண்டும் சிசிடிவி பழுது!
விழுப்புரம், மே 8- விழுப்புரத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் (ஸ்ட்ராங் ரூம்) மீண்டும் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நிலை யில், புதனன்று காலை விழுப்புரம் மாவட்  டம் முழுவதும் பரவலாக  பலத்த இடி,  மின்னலுடன் மழை பெய்தது. இந்நிலை யில், காலை 7 மணியளவில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமுக்கான சிசிடிவி கேமிராக் கள் திடீரென பழுதாகின. சுமார் 1 மணி நேரம் வரை ஸ்ட்ராங் ரூமில் உள்ள 7  சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை  என்றும் பின்னர் சரி செய்யப்பட்டதாக வும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவல ரும், ஆட்சியருமான பழனி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பும் இதேபோல விழுப்  புரத்தில் சிசிடிவிக்கள் திடீரென பழு தாகின. அதேபோல நீலகிரி, திருப்பூர், ஈரோடு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை களில் திடீரென சிசிடிவி கேமராக்கள் இயங்காமல் போனது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன் 24 துணைத் தேர்வு 
சென்னை, மே 8- தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு  மாணவர்களுக்கு ஜூன் 24 அன்று துணை  தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மார்ச் மாதம் நடை பெற்ற 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்  தேர்வை 11 ஆயிரத்து 594 பேர் எழுத வில்லை. தேர்வு எழுதியவர்களிலும் 41  ஆயிரத்து 410 பேர் தேர்ச்சி பெறவில்லை.  இந்நிலையில் தேர்வை எழுதாத மற்றும்  தேர்ச்சி பெறாத மாணவ - மாணவியர்க்கு  மற்றுமொரு வாய்ப்பாக துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

அந்த வகையில், ஜூன் 24 துவங்கி ஜூலை 1 வரை இந்த துணைத் தேர்வுகள்  நடைபெறுகின்றன. இந்த துணைத்தேர்வை எழுத விருப்பம் உள்ள மாணவர்கள் மே 16  முதல் ஜூன் 1-க்குள் அவரவர் படித்த  பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்  பிக்கலாம். தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைத்துள்ள சேவை  மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க லாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பகத்தில் பதிவு
செய்து காத்திருப்போர் 53.74 லட்சம் பேர்!

சென்னை, மே 8 - தமிழ்நாட்டில் 53 லட்சத்து 74 ஆயிரம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 30 வரை மாவட்ட, மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அதில், வேலைவாய்ப்புக்காக ஆண்கள் 24 லட்சத்து 74 ஆயிரத்து 985 பேரும், பெண்கள் 28 லட்சத்து 98 ஆயிரத்து 847 பேரும், மாற்றுப் பாலினத்தவர் 284 பேரும் பதிவு செய்துள்ளனர்.

வயது வாரியாக, 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 10 லட்சத்து 69 ஆயிரத்து 609 பேர், 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 23 லட்சத்து 63 ஆயிரத்து 129 பேர், 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 16 லட்சத்து 94 ஆயிரத்து 518 பேர், 46 வயது முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2 லட்சத்து 40 ஆயிரத்து 537 பேர், 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 7 ஆயிரத்து 323 பேர்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளின் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 803 ஆக உள்ளது. அறிதிறன் குறைபாடு மற்றும் இதர குறைபாடுடையோர் எண்ணிக்கை- ஆண்கள் 1 ஆயிரத்து 375 பேர், பெண்கள் 445 பேர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.