மாசு, விபத்து இல்லாத தீபாவளிக்கு பிரச்சாரம்
கள்ளக்குறிச்சி, அக்.17- தீபாவளியை பாது காப்பாக கொண்டாட விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பின்னர் கள்ளக்குறிச்சி, கச்சிரா பாளையம் சாலை, மகப்பேறு மருத்துவமனை, காந்தி சாலை, சேலம் சாலை, கவரை தெரு உள்ளிட்ட முக்கிய பகுதி களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனை, பள்ளி கள், நீதிமன்றங்கள், புனித தலங்கள் அருகே அதிக சத்தம் உள்ள பட்டாசு களை வெடிக்கக் கூடாது என்றும், பசுமை பட்டாசு களை பயன்படுத்த வேண்டும் என்றும் அறி வுறுத்தப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரி யம் உதவிப் பொறியாளர் ராம்குமார், பசுமை தோழர் அஹான்ஷா மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
                                    