மணல் குவாரி அமைக்க வேண்டும் மாட்டு வண்டி தொழிலாளார் சங்கம் கோரிக்கை
கடலூர், ஆக.26- கடலூர் மாவட்டத்தில் மாட்டு வண்டி களில் மணல் எடுத்து செல்வதற்கு தனி யாக குவாரி அமைக்க வேண்டும் என்று மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட மாட்டு வண்டி சங்கத்தின் 7வது மாவட்ட மாநாடு நெய்வேலியில் நடை பெற்றது. ஆர்.வி.சுப்பிரமணியன் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்.சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டை நிறைவு செய்து மாநிலத் துணைத் தலைவர் பி.கருப்பையன் உரையாற்றினார். நிர்வாகிகள் தேர்வு சங்கத்தின் மாவட்ட தலைவராக வி.திரு முருகன், மாவட்டச் செயலாளராக எஸ். பொன்னம்பலம், மாவட்டப் பொருளாளராக பி.முருகானந்தம் உட்பட 30 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டனர். மாட்டு வண்டி மணல்குவாரியை அமைத்து தர வேண்டும், மாட்டு வண்டி களில் மணல் எடுத்து வெல்ல அதிகாரி கள் கெடுபிடி காட்டக்கூடாது. மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து சென்றால் அப ராதம் விதிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மான ங்கள் நிறைவேற்றப்பட்டன.