tamilnadu

img

திருப்போரூர் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலி

திருப்போரூர், ஆக.26-  திருப்போரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் கோயில் குளத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  4 பேர் பலத்த படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் திலிப்ராக வன் (24). இவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, அதேப்பகுதியை சேர்ந்த ஜெய ராமன், யுவராஜ், திருமால் மற்றும் கூவத்தூரை சேர்ந்த சூர்யா ஆகிய நண்பர்களுடன், ஞாயிறன்று (ஆக.25) கங்கையம்மன் கோயில் பின்னால் ஒன்று கூடி  கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி யுள்ளனர். அப்போது, குளக்கரை யில் மர்மப்பொருள் ஒன்று கிடைத்து ள்ளது. அந்த பொருளை அவர்கள் உடைத்து பிரிக்க முயன்றபோது, பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.  இந்த சத்தம் கேட்டு கிராம மக்கள் அப்பகுதிக்கு வந்து பார்த்துள்ள னர். அப்போது, பலத்தகாய மடைந்திருந்த இளைஞர்களை மீட்டு  செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த னர். இது பற்றி தகவல் அறிந்த மானாம்பதி மற்றும் திருப்போரூர் காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.  வெடித்து சிதறிய மர்மபொருள் என்ன? இங்கே எப்படி வந்தது? என மாமல்லபுரம் துணை கண்காணிப்பா ளர் பத்ரிநாத் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மருத்துவமனை யில் சிகிச்சை பலனின்றி சூர்யா, திலிபன்ராகவன் ஆகியோர் உயிரிழந்தனர்.  ஜெயராமன் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னையை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மண்டல ஐஜி.நாகராஜ், டிஐஜி.தேன்மொழி ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, மேலும் ஒரு ராக்கெட் லாஞ்சர் வகையை சேர்ந்த வெடிகுண்டு ஒன்றை கைப்பற்றி யுள்ளனர். வெடித்து சிதறிய வெடிகுண்டின் பாகங்களை சேகரித்து  தீவிர ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாள் இ.சங்கர் சந்தித்து அறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில், ‘அனுமந்தபுரம் கிராமத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பயிற்சி மையம் உள்ளது அப்பகுதியில் இருந்து அடிக்கடி இது போன்ற வெடிகுண்டுகள் அனுமந்த புரம், அஞ்சுர் உள்ளிட்ட கிரா மங்களின் உள்ள வீடுகளின் மேல் விழுந்து அவை பத்திரமாக அப்புறப்ப டுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளதால் மானம்பதி கிராமம் முழுவதும் ஆய்வு செய்து கிராம மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். அதே போன்று பாதிப்புக்குள்ளாகியுள்ளவர்களின் குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்’ என்றார். 

;