tamilnadu

img

பத்திரிகை துறையில் கருப்பு ஆடுகள்: உயர்நீதிமன்றம் வேதனை

சென்னை,ஜன.12- தமிழகத்தில் பத்திரி கையாளர் என்ற போர்வை யில் உலாவி வரும் மோசடி பேர்வழிகள் விரைவில்  களையெடுக்கப்பட வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றம் கூறி யுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல், விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர மறுத்தது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, பத்திரி கையாளர் என்ற பெயரில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். மனுதாரரின் நம்பகத் தன்மை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியதையடுத்து நீதிபதி களிடம் மனுதாரரின் அடை யாள அட்டைகள் வழங்கப் பட்டன. அவற்றில் சிலை கடத்தல் வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப் பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷாவின் அடை யாள அட்டையும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், காதர் பாஷாவின் அடையாள அட்டை எப்படி வந்தது எனவும், மனுதாரரின் பத்தி ரிகை அரசால் அங்கீகரிக் கப்பட்டதா எனவும் அறிக்கை அளிக்க உத்தர விட்டனர். பத்திரிகையாளர் என்ற பெயரை, மோசடி பேர்வழி கள் பலர் கேடயமாக பயன் படுத்துவதாகத் தெரிவித்த நீதிபதிகள், மஞ்சள் பத்திரிகை நடத்துபவர்களும் பத்திரிகையாளர் என கூறிக் கொள்வது வருத்தத்துக்குரி யது என்று கூறினர். பத்திரிகைகளை பதிவு செய்ய குறைந்தபட்ச விற்பனை உள்ளிட்ட விதி முறைகளை வகுக்கவும், பத்திரிகை துறையில் கருப்பு ஆடுகளை அகற்றவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். பத்திரிகைகளில் செய்தி என்ற பெயரில் கருத்து திணிப்பு நடைபெறுவதாக வும், பத்திரிக்கை சங்கங்களை போலி செய்தி யாளர்கள் நிர்வகிப்பதாகவும் அவர்கள் கூறினர். போலி பத்திரிகை யாளர்களால் நேர்மையாக பணியாற்றும் உண்மையான பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரி வித்த நீதிபதிகள் அரசின் சலுகைகள் உண்மையான பத்திரிகையாளர்களுக்கு கிடைப்பதில்லை என்றனர். உண்மையான பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க அறிவுறுத்திய நீதிபதிகள் தற்போது அரசு அடையாள அட்டை பெற்றுள்ள பத்திரிகையாளர்கள் மீது குற்ற வழக்கு உள்ளதா? என காவல் துறை விசாரிக்க உத்தரவிட்டனர். தமிழகத்தில் எத்தனை பத்திரிகைகள் உள்ளன? என்றும், எத்தனை பேருக்கு அரசு அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ளது? என்றும், எத்தனை பத்திரி கையாளர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது? என்றும் அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தர விட்டனர். தகவல் தொடர்பு துறை செயலாளர், பத்திரிகை யாளர் மன்றம் மற்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தை வழக்கில் சேர்த்தும் நீதிபதிகள் உத்தர விட்டனர்.

;