கடலூர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை தாக்க பாஜகவினர் முயற்சி
கடலூர், ஆக. 7 - கடலூர் நீதிமன்ற வளாகத்தில் பாஜக வழக்கறிஞர்கள் செய்தி யாளர்களை தாக்க முயன்ற தால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு முகநூலில் கடலூரைச் சேர்ந்த விசிக பிரமுகர் ஒருவர், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பற்றி அவதூறாக பதிவிட்ட இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் கடலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சம்பந்தமாக வியாழக் கிழமை (ஆக.7) சாட்சி சொல்வதற்காக தமிழிசை கடலூர் மகிளா நீதி மன்றத்தில் ஆஜராகினார். இதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பெண்களை அரசியல் கட்சியினர் தரம் தாழ்ந்து விமர்சிக்க கூடாது என்று கூறி னார். செய்தியாளர் ஒருவர் பாஜகவினரும் பெண்களை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று கேள்வி கேட்டார். இந்தக் கேள்வியை எதிர்கொள்ள முடியாததால், தமிழிசை சௌந்தரராஜன் அருகில் இருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பாஜக வழக்கறிஞர்கள் அந்த செய்தியாளரை தாக்க முயன்றனர். அனைத்து செய்தியாளர்களும் ஒன்று சேர்ந்து பாஜகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். காவல்துறையினர் தலையிட்டு சமாதானப் படுத்தினர். பின்னர், காரில் ஏறி செல்ல முயன்ற தமிழிசை சௌந்தரராஜனை பத்திரி கையாளர்கள் மீண்டும் சூழ்ந்து கொண்டு “உங்க ளுடைய கட்சியினர் பத்திரி கையாளர்களை மிரட்டும் போது நீங்கள் கண்டு கொள்ளாமல் செல்வது சரியில்லை” என்று கூறி னார்கள். இதைத் தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய தமிழிசை சௌந்தரராஜன் கட்சியினரைக் கண்டித்த தோடு பத்திரிகையாளர்க ளிடம் “இனிமேல் இது போன்ற நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்து சென்று விட்டார்.
