tamilnadu

img

தொழில் அதிபரை மிரட்டி பணம் கேட்ட பாஜக நிர்வாகி கைது

தொழில் அதிபரை மிரட்டி பணம் கேட்ட பாஜக நிர்வாகி கைது

சென்னை, ஜூன் 13- தொழில் அதிபரை மிரட்டி பணம் கேட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், செங்குன்றம் காவல்துறையினர் பாஜக ஓபிசி அணி செயலாளரும் பிரபல ரவுடி யான கே.ஆர்.வெங்கடேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர். செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பி.டி.மூர்த்தி நகர், வீரவாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேஷ். இவர், தமிழக பாஜகவில் மாநில ஓபிசி அணி செயலாளராக இருந்து வருகிறார். இவர் மீது ஆந்திரா, தெலங்கானாவில் செம்மர கடத்தல் வழக்குகள், ஆவடி காவல் ஆணையரகத்தில் பண மோசடி, துப்பாக்கி வைத்து மிரட்டியது உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் கடந்த தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா தொடர்பாக, அவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளாரா என்று தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியுள்ளனர். பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் நில முறைகேடு தொடர்பாக ஆவடி மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் மிளகாய் பொடி வெங்கடேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியில் வந்த பிறகு தொடர்ந்து மிரட்டல் மற்றும் முறை கேடுகளில் ஈடுபடுவதாக காவல் துறை யினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை செங்குன்றம் காவல்துறையினர் பாஜக பிரமுகர் கே.ஆர்.வெங்கடேஷை கைது செய்தனர்.