tamilnadu

பயோ மெட்ரிக் வருகைப் பதிவு ஆசிரியர்களுக்கு கூடுதல் நேரம்

சென்னை, ஜூன் 16- தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப்பதிவை பயோ-மெட்ரிக் கருவியில் பதிவு செய்ய கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்ய பயோ மெட்ரிக் முறை  கடந்த சில நாள்களாக அமல்படுத்த ப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத  பணியா ளர்கள் வருகைப்பதிவு, பயோ மெட்ரிக் கருவியில் பதி வேற்றம் செய்வதற்கான கருவிகள் வழங்கப்பட்டு ள்ளன.  பள்ளி வேலை நாட்களில் காலை 9.30 மணி, மாலையில் பள்ளி முடியும் நேரத்திலும் ஆசிரி யர்கள் தங்கள் கைவிரல் ரேகையைப் பதிவு செய்வது அவசியம். அதேபோன்று  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்கள், வட்டார கல்வி  அலுவலகம், வட்டார மைய கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் பயோ-மெட்ரிக்  கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை விடு முறைக்கு பின் பள்ளிகள் கடந்த 3ஆம் தேதி திறக்கப்பட்டது. ஒரே நேரத்தில்  பயோமெட்ரிக் கருவியில் வருகைப்பதிவு செய்ய காலதாமதம் ஏற்படு கிறது என்பதால், வரு கைப்பதிவு செய்ய கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஆசிரி யர்கள் சார்பில் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, காலை 9.30 மணிக்கு பதிலாக 9.35 மணிக்குள் ஆசிரியர்கள் வருகைப்பதிவு செய்ய வேண்டும். மாலை 4.30 மணிக்கு பதிலாக மாலை 4.35 மணிக்கு பதிவு செய்ய வேண்டும் என அறிவுறு த்தப்பட்டுள்ளது. அதே போல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலகம், வட்டார மைய கல்வி அலுவலகங்க ளில் ஆசிரியரல்லாத பணி யாளர்கள் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.

;