tamilnadu

img

நூலாற்றுப் படை எம்.ஜே.பிரபாகர்

“குழந்தைகளை மற்றவர்களுடன் பழகவிடுங்கள் பெற்றோரே”

கால மாற்றத்தில் நம் வாழ்க்கை முறை மட்டுமல்ல நம் குழந் தைகள் வளர்ப்பு முறையும் மாறி வரு கின்றன.  சிறந்த குழந்தை வளர்ப்பு என்பது நம் குழந்தைகளை உற்று நோக்கு வது தான்.

அதுபோல குழந்தை வளர்ப்பு கலை என்பது பெண்களுக்கானது மட்டு மல்ல ஆண்களின் பங்கும் அதிகம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்து கிறார் நூலாசிரியர்.

குழந்தை வளர்ப்பது என்பது ஒரு கலை மட்டுமல்ல, அது அறிவியலும் கூட.

எப்போதுமே வளரிளம் பருவத்தினர் சந்திக்கும் சங்கடங்களில் முதன்மை யானவை உடலில் ஏற்படும் மாறுதல் மற்றும் உளவியல் குழப்பங்கள்.

இந்த சூழலில் குழந்தைகளை கவன மாக கையாள வேண்டும். வளரிளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களே வாழ்நாள் பயணத்தின் முழுமைக்குமான முதல் படியாக இருக்கும்.

நிஜ உலகில் ரத்தமும் சதையமாக வாழும் மனிதர்களிடம் அன்பு காட்ட மறுத்துவிட்டு, இணைய மாய உலகம் காட்டும் மனிதர்களிடம் அதிகமான அன்பை எதிர்பார்க்கிறோம். விடுமுறை காலங்களில் குழந்தை களை நம் உறவினர் வீடுகளுக்கு அழை த்துச் செல்லும் வழக்கத்தை விடுத்து? ஏதாவது ஒரு சிறப்பு வகுப்பில் சேர்த்து விடும் நிலை அதிகரித்து வருகிறது.

பிற மனிதர்களோடு பழகும் போது தான் அவர்களின் உணவுகளை புரிந்து கொள்ளும் பழக்கம் ஏற்படும். இன்றைய சூழலில் பகிர்ந்து  உண்ணும் பழக்கத்தை பெற்றோர்களும் பிள்ளைகளும்  மறந்து போனவர் களாகவே உள்ளார்கள். பகிர்ந்து கொள்ளுதல் என்பது உணவு டன் முடிவதில்லை ஒரு இணக்கமும் நெருக்கமும் ஏற்படுவதை இந்த பகிர்ந்து உண்ணும் பழக்கம் ஏற்படுத்தும்.

 துன்பத்தையும் இன்பத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  இதன் மூலம் வேதனையும் மன அழுத்தமும் குறையும். மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அதிகப்படுத்தும்.  நம் குழந்தைகளை சிறந்தவர்களாக உருவாக்க நினைக்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.

நூல் :  “அன்பான பெற்றோரே”
(குழந்தை வளர்ப்பின் நுட்பங்கள்)
நூலாசிரியர்; யெஸ். பாலபாரதி
விலை: ரூபாய் 100
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
சென்னை -600018
தொடர்பு எண்: 044 24332424

கடலோடிகளின் துயரங்களைச் சொல்லும் “வேளப்பாடு”

கடலோடிகள்(மீனவர்கள்)... அவர் களுக்கு என்ன கடலுக்கு உள்ளே போனாலே பணம் கொட்டோ  கொட்டென்று கொட்டிக் கிடக்கும் என்ற கூற்று சமவெளி யில் வசிக்கும்  சமூக மக்களிடம் உள்ளது.

இயற்கையை அழிக்காமல் குஞ்சு  குட்டிகளை சிதைக்காமல் சுற்றுச்சூழ லுக்கு உகந்த தொழிலை செய்து வரு பவர்கள் கடலோடிகள்

. பாரம்பரிய அறிவுடன் அடுத்த தலை முறைக்காகவும் சிந்தித்து மீன் இனங்களை அழிய விடாமல் பாதுகாத்து வருபவர்கள் தான் கடலோடிகள்.  10 சிறு கதைகளை கொண்ட நூல் தான்  வேளப்பாடு. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக  மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்கிறது அல்லது சுடுகிறது.  

சில சமயம் புயல் காரணமாக மீனவர்களை கடல் அலைகள் அடித்துக் கொண்டு சென்று விடுவதும் மீனவர்கள் வாழ்க்கையில் மிக மோசமான துயரங்கள்.

இவை மட்டுமல்ல கடலோர வாழ்வில் இன்னும் கவனத்திற்கு வராத துயரங்கள், வழிகள்,  வேதனைகள் இருக்கின்றன என்பதை இந்த நூலின் சிறுகதைகள் மூலம் நாம் அறிய முடியும். மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து மிக அருமையான பதிவுகள் தந்துள்ளார்  நூலாசிரியர்.

 “பிறந்த ஊரும் இன்னொரு தாய்தான்”

திருவண்ணாமலை மாவட்டம் மின்னல் நரசிங்கபுரம் கிராம த்தில் உள்ள நெசவுத் தொழில் குறித்த கவிதை நூல் இது.

ஒவ்வொரு கவிதைக்கும் பின்னா லும் தனது அனுபவங்களை அள்ளி வீசுகிறார் நூல் ஆசிரியர். “பெற்றவள் மட்டுமல்ல பிறந்த ஊரும் இன்னொரு தாய் தான்”

“இன்றளவும் தமிழரின் மானத்தை நூல்கள் தான் காத்துக் கொண்டிருக்கின்றன” “நெய்யப்பட்ட துணிகள் லாரிகளிலும் கப்பல்களிலும் ஏன் விமானத்திலும் ஏறும் நெய்தவனோ  வீதியில் நின்றபடி”

“நெசவாளியின் தேசிய ஆடை அதிகபட்சம் கோவணமும்  துண்டும் தான்” “வாக்கு வங்கி அரசியல் உருவாக்கிய இயந்திர  மயமும் உலகமயமும் கைத்தறி நெசவை கைப்பற்றிக் கொண்டன”.

“எல்லா அறிவியல் வெளிச்சங்களும் நெசவாளனை மட்டும் இருட்டுக்குள் நெம்பி தள்ளியது”

“எப்பவாவது கவர்மெண்ட் ரெக்கார்டுகளுக்ம் கல்யாண பத்திரிக்கையும் தேவைப்படும் போதுதான் பெயரே எழுதுவார்கள்”

“கல்வியில் வளர்ச்சி பெற்ற ஊருக்குச் சான்றாக நரசிங்க புரத்தை காட்டலாம்” இதுபோன்ற பல நுட்பம் நுட்பமான விஷயங்களை கவிதை மொழியில் நெய்து உள்ளார் நூலாசிரியர். அவசியம் படிக்க வேண்டிய நூல்.

நூல் ஆசிரியர் : பாவலர் வையவன்
விலை : ரூபாய் 250
 வெளியீடு : சோ. ஏ.லோகநாதன் “நெசவு குடில்” திருவண்ணாமலை -606601
தொடர்பு எண் : 9442110020

இயற்கை விவசாயத்திற்கு திருப்பச் சொல்லும் “ஒரக்குழி”

வளர்ந்து வரும் நுகர்வு கலாச் சாரம் அதன் விளைவு களை எண்ணாமல் அனைத்திலும் வேகத்தோடு பெரிதளவு உற்பத்தி என்ற நோக்கத்தோடு மக்கள் செல்கின்றனர்.

இவையெல்லாம் மாறி இயற்கை வேளாண்மையை நோக்கி நாம் திரும்ப வேண்டும் என்ற நோக்கில் வெளிவந்துள் ளது இந்த நூல். எளிய மக்களின் உணர்வு களை அவர்களது மொழி யிலேயே சொல்லுவது மிகவும் சிறப்பு. இயற்கைக்கு திரும்புங்கள் என்று கூறுவது மட்டும் போதாது. அதன் பயன்களை புரிய வைக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவ னத்துடன் இந்த நூலை எழுதி யுள்ளார் நூலாசிரியர்.  

ஒரக்குழி நாவல் நேர்மறை அணுகுமுறையில் எழுதப் பட்டுள்ளது. நேர்கோட்டில் பயணப்படுகிறது கதை.  எடுத்துக்கொண்ட இயற்கை விவசாயம் என்கிற கரு மட்டுமே நாவல் முழுவதும் பேசப்படு கிறது. இயற்கை விவசாயம்  குறித்த முழுமையான பாடப்புத்தகம் தான் இந்த நூல்.

நவீன விவசாயத்தால் நலி வடைந்தவர்களுக்கு இந்த நூல் ஒரு கலங்கரை விளக்கம்.  நோய்வாய்ப்பட்டவர்களுக்கு நோய்வாய்ப்பட விரும்பாத வர்களுக்கு இந்த நூல் உணவே மருந்து தான் என்பதை கற்பிக்கிறது. அனைவரும் கற்றறிய வேண்டிய அவசியமான நூல் இது.

“ஒரக்குழி” நாவல்
நூலாசிரியர் -
வானவன் மாலதி
வெளியீடு ; ஜீரோ டிகிரி பப்ளிஷிங்
சென்னை -600040 தொடர்பு எண்: 8925061999
விலை ரூபாய்: 290