மாற்றுத்திறனாளிக்கு மின்கல சக்கர நாற்காலி
திருவள்ளுர் மாவட்டம், திருவாலங்காடு அரசினர் மேல் நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் சனிக்கிழமையன்று (அக் 18), நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1.05 இலட்சம் மதிப்பிலான மின்கல சக்கர நாற்காலியை மாற்றுத்திறன் பயனாளிக்கு வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப், திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், மாவட்ட மருத்துவ அலுவலர்கள் மரு.பிரியா ராஜ் (திருவள்ளுர்), மரு.பிரபாகரன், திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ரேவதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
