வரதட்சணையை ஊக்குவிக்கும் விளம்பரங்களை தடைசெய்க! மாதர் சங்க தென்சென்னை மாநாடு கோரிக்கை
சென்னை, ஆக. 24 - வரதட்சணையை ஊக்கு விக்கும் நகை, துணி, பாத்திர கடை சீர்வரிசை விளம்பரங்களை தடை செய்ய வேண்டுமென்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மாதர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட 17வது மாநாடு ஞாயிறன்று (ஆக.24) நெற்குன்றத்தில் நடைபெற்றது. மாநாட்டில், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும், நூறுநாள் வேலை திட்டத்தை நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு முழுமையாக அமல்படுத்த வேண்டும்; கூலி நிலுவையை உடனடி யாக வழங்க வேண்டும். மக ளிர் உரிமை தொகை தகுதியுள்ள அனைவ ருக்கும் வழங்க வேண்டும், சாதி ஆணவப் படு கொலையை தடுக்க தனி சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொதுமாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி தலைமை தாங்கினார். சைதாப்பேட்டையிலிருந்து கொண்டு வரப்பட்ட மாநாட்டு கொடி, மயிலாப் பூரிலிருந்து எடுத்து வரப்பட்ட செல்வி நினைவுச் சுடர், ஆலந்தூரிலிருந்து ஏந்தி வரப்பட்ட எஸ்.ஹேமாவதி நினைவுச்சுடரை தலைவர்கள் பெற்றுக் கொண்டனர். துணைத்தலை வர் ஏ.பிரேமாவதி சங்கக் கொடியை ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை துணைச் செயலாளர் டி.விஜயகுமாரி வாசிக்க, மதுரவாயல் பகுதிச் செயலாளர் எஸ்.விஜய லட்சுமி வரவேற்றார். அகில இந்தியச் செய லாளர் பி.சுகந்தி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். பிரதிநிதிகள் மாநாட்டில் வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலாவும், வரவு செலவு அறிக்கை யை பொருளாளர் ஜெ.ஜூலியட்டும் சமர்ப்பித்த னர். துணைச் செயலாளர் பி.சித்திரைச்செல்வி, மதுரவாயல் பகுதித்தலை வர் எஸ்.சித்ரா, பொருளாளர் எஸ்.தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் தீர்மானங் களை முன்மொழிந்தனர். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் இ.மோகனா, வரவேற்புக் குழுத் தலைவர் எஸ்.வெள்ளைசாமி, சமூக செயற்பாட்டாளர் எம்.ஷீபா, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் என்.குமரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் ஜி.பிரமிளா நிறைவுரையாற்றினார், மாவட்டக்குழு உறுப்பினர் பி.கவிதா நன்றி கூறினார். நிர்வாகிகள் 23 பேர் கொண்ட மாவட்டக்குழுவின் தலை வராக எஸ்.சரவணசெல்வி, செயலாளராக ம.சித்ரகலா, பொருளாளராக சி.ஹேமா வதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.