tamilnadu

img

தலைக்கவசத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி

தலைக்கவசத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம், ஜூலை 2- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் புதனன்று  (ஜூலை 2) தலைக்கவசத்தின் அவ சியம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை  இணைந்து நடத்திய  தலைக்கவசத்தின் அவசி யம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர்  கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் தலைக் கவசத்தின் அவசியம் குறித்த வாசகம் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஒட்டி, விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிர சுரங்களை வழங்கினார். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் தொடங்கி, மூங்கில் மண்டபம் வழி யாக யாத்ரி நிவாஸ் வரை யில் சுமார் 200 இரு சக்கர வாகனத்தில் தலைக் கவசத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகை யுடன் சென்றனர். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் வட்டார போக்கு வரத்து அலுவலர் நாக ராஜன், காவல் துறை போக்குவரத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.