tamilnadu

img

பள்ளி மாணவர்களுக்கு விருது...

2019-20 கல்வியாண்டுக்கான ‘ராஜ்யபுரஸ்கார்’ விருது சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் பயிலும் 16 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. சமூதாயத்தில் நற்பணிகளை மேற்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்திய பாரத சாரணியர் வழிக்காட்டுதல் குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது அறிவிக்கப்பட்டது. சமூக சேவைகள் மற்றும் ரத்ததான முகாம்களை நடத்தியதால் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளி மாணவர்களை பள்ளி நிர்வாகம் பாராட்டி கவுரவித்துள்ளது.