ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும், திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்த அனைத்து ஆட்டோக்களுக்கும் க்யூ ஆர் கோடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநகர தலைவர் டி. யுவராஜ் தலைமை வகித்தார். மின் ஊழியர் அமைப்பு நிர்வாகி கே. காங்கேயன், ஆட்டோ சங்க செயலாளர் கே. சரவணன், மாநகர செயலாளர் பிரம்மா, சிஐடியு ஒருங்கிணைப்பாளர் கே. நாகராஜ், சுமை பணி சங்க செயலாளர் இரா. பாரி, கட்டுமான சங்கம் கமலக்கண்ணன், போக்குவரத்து அரங்கம் ஏ. சேகரன், தையல் சங்க செயலாளர் எம். வீரபத்திரன், சிஐடியு நிர்வாகி முரளி உள்ளிட்டோர் உரையாற்றினர்.