ஆட்டோ ஓட்டுநர் சங்கம் உதயம்
ராணிப்பேட்டை, செப். 14 - ராணிப்பேட்டை மாவட்டம், சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் சங்கம் சார்பில் ஞாயிறன்று (செப். 14) முத்துக்கடை புதிய பேருந்து நிலையம் அருகில் புதிய கிளை துவக்கப்பட்டது. கிளை தலைவர் சி. சண்முகம் தலைமையில், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் பி. மணி சங்கத்தின் கொடியேற்ற தலைவர் கேகேவி. பாபு பெயர் பலகை திறந்து வைத்தார். சிபிஎம் வாலாஜா தாலுகா குழு செயலாளர் ஆர். மணிகண்டன், சிஐடியு மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் என். ரமேஷ், ஆட்டோ சங்க மாவட்ட துணை தலைவர்கள் டி. லோகநாதன், ராமதாஸ், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மீராஸ், வாலிபர் சங்கம் சார்பில் ஜெயகாந்தன், செந்தில் குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். உடன் கிளை கௌரவ தலைவர் பி. ராஜேந்திரன், செயலாளர் பி. நாகராஜ், பி. கவியரசன், எஸ். குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக கிளை பொருளாளர் பி. கமலக்கண்ணன் நன்றி கூறினார்.