tamilnadu

img

அரசு மருத்துவமனையில் 11 ஆவது இருதய மாற்று அறுவை சிகிச்சை

சென்னை, ஜன. 21- கோயம்புத்தூர் காந்தி புரத்தில் வசிப்பவர் மகேந்தி ரன் (39). இவர் ஆட்டோ ஓட்டுனராவார். கடந்த வருடம் ஜனவரி மாதம் 29 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் இருதய அறுவை சிகிச்சைப் பிரிவில் இருத யத்தில் உள்ள அனைத்து வால்வுகளும் பழுது அடைந்து, இருதயம் செயலி ழந்ததால் இருதய மாற்று அறுவை ஒன்றே தீர்வு என்ற நிலையில் உள்நோயா ளியாக அனுமதிக்கப்பட்டார். தமிழக அரசு முதல மைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் ஒப்புதல் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குழு விடம் இருந்தும் ஒப்புதல் பெறப்பட்டது. இந்தாண்டு ஜனவரி 5ஆம் தேதி, சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த நபரிட மிருந்து பெறப்பட்ட இருதயம் மகேந்திரனுக்கு பொருத்தப்பட்டது. துறை இயக்குநர் ஜி.ஜோசப்ராஜ், மற்றும் மயக்க மருந்தியல் துறை பேராசிரியர் வெள்ளிங்கிரி தலைமையில் சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் மாற்று இருதயம் பொருத்தப் பட்டது. தற்பொழுது நலமாக உள்ளார். இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்வ தற்கு கமார் 35 முதல் 40 லட்சம் வரை செலவாகும். இதுவரை 11 இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் இந்த ஆண்டு முதலாவதாக வெற்றிகரமாக செய்யப் பட்ட அறுவை சிகிச்சை இது வாகும்.

;