tamilnadu

img

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் பாரத் பயோடெக் நிறுவன உயர் அதிகாரிகள் ஆய்வு...

செங்கல்பட்டு':
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 4 அன்று நடத்திய ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை ஆய்வு செய்தனர்.

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு விட வேண்டும்அல்லது தமிழக அரசுடன் இணைந்து மத்தியஅரசு தடுப்பூசி தயாரிப்புப் பணியை விரைந்து துவக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு இரண்டு  முறை கடிதம்எழுதினார்.  மத்திய அமைச்சரை தமிழக அமைச்சரும் நேரில் சந்தித்து முதலமைச்சரின் கடிதத்தை கொடுத்து வலியுறுத்தினர்.ஆனாலும் மத்திய அரசிடம் இருந்து இதுவரைக்கும் தமிழகத்திற்கு சாதகமான பதில் ஏதும் கிடைக்கவில்லை.இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் வியாழனன்று ஆலோசனை நடத்தினார்.இதனைத்தொடர்ந்து, பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுசித்ரா, செயல் இயக்குநர் சாய் பிரசாந்த் ஆகியோர் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு ஜூன் 4 வெள்ளியன்று செங்கல்பட்டு எச்எல்எல் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.

படம் : பாரத் பயோடெக் நிறுவன உயர் அதிகாரிகள் ஆய்வு செய்த பின் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பொழுது.. 

;