states

img

பாலியல் வன்கொடுமை விவகாரம் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா கைது

பெங்களூரு, மே 4- பாஜக கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்  தின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவுகடாவின்  மகன் எச்.டி.ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா சுமார் 300 பெண்களை மிரட்டி பாலி யல் வன்கொடுமை செய் தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

3000க்கும் ஆபாச வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம்  கசிந்த பின்பு பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்ய கர்நாடக சிஐடி  போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் எச்.டி. ரேவண்ணா மீதும் அவரது வீட்டில் பணிபுரியும் பெண் ஒரு வர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக கர்நாடகா போலீ சார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.  இவ்வாறு நாள்தோறும் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும்  எச்.டி.ரேவண்ணா மீது பெண்கள் பாலியல் வன்கொடுமை  புகார் அளித்து வரும் நிலையில், புகார் அளித்த ரேவண்ணா வீட்டின் பணிப்பெண்ணை எச்.டி.ரேவண்ணா  கடத்தியதாக பணிப்பெண்ணின் மகன் கே.ஆர். நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  ஏப்ரல் 29 அன்று   கடத்தப்பட்ட பெண்ணின் மகன் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், எஸ்ஐடி போலீசார் அவரை கண்டு பிடித்துவிட்டனர்.

இந்நிலையில், பாலியல் புகார் கூறிய பெண் கடத்தப்  பட்ட விவகாரத்தில் கைது நடவடிக்கைக்கு தடை கோரி  கீழமை நீதிமன்றத்தில் ரேவண்ணா மனுதாக்கல் செய்தார்.  இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், எச்.டி.ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு  அதிகாரிகள் சனியன்று மாலை கைது செய்தனர்.

;