சென்னை, மே 4- தமிழகத்தில் சட்டப் பல்க லைக்கழகத்தின் கீழ் இயங் கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10 முதல் விண்ணப் பிக்கலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இக்கல்லூரிகளில் ஐந் தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளில் சேர மே 10 முதல் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://tndalu.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள் ளார்.