tamilnadu

img

செய்தியாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி

செய்தியாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு  பயிற்சி

சென்னையில் தினசரி மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (Al) குறித்த  பயிற்சி முகாம் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில்  ஞாயிறன்று (அக்.12) நடைபெற்றது. பயிற்சியாளராக தமிழகத்தின் பிரபல ஏஐ வல்லுனர் முத்துகிருஷ்ணன் சின்னதுரை சுமார் 3 மணிநேர வகுப்பு எடுத்தார். ஏஐயை எந்த வகையில் பயன்படுத்தலாம், இதில் உள்ள சாதக,பாதக விசயங்களை மிகநுணுக்கமாக விளக்கியும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தெளிவாகவும் வகுப்பெடுத்தார். மன்ற துணைத்தலைவர் கே.பாரதி முகாமை ஒருங்கிணைத்தார். முகாமில் பங்கேற்ற செய்தியாளர்களுக்கு இணையம் வழியாக சான்றிதழ் வழங்கப்பட்டது.