tamilnadu

மாணவனை தாக்கிய கல்லூரி முதல்வரை கைது செய்க! புதுவை அரசுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை

மாணவனை தாக்கிய கல்லூரி முதல்வரை கைது செய்க!  புதுவை அரசுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி  கோரிக்கை

புதுச்சேரி, செப்.29 -  பட்டியலின மாணவரை தாக்கி இழிவுபடுத்திய கல்லூரி முதல்வரை வன்கொடுமை தடுப்பு பிரிவில் கைது செய்ய வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி அரசை வலியுறுத்தி யுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி தலைவர் கொளஞ்சியப்பன், செயலாளர் சரவணன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது: புதுச்சேரி மாநிலம், கதிர்காமம் அரசு செவிலியர் கல்லூரியில் ஸ்ரீராம் என்ற பட்டிய லின மாணவர் அடித்து சித்திர வதை செய்யப்பட்டுள்ளார். ஆசிரி யர்கள் மாணவர்கள் முன்னிலை யில் கல்லூரியின் முதல்வர் பிரமிளா தமிழ்வாணன், உதவி பேராசிரியர்கள் பிரவீணா, சந்தோஷ்குமாரி ஆகியோர் காலில் விழ வைத்து தங்களுடைய சாதிய வக்கிரமத்தை கொண்டாடி இருக்கிறார்கள். மேலும் “நீ எப்படி கோர்ஸை முடிக்கிறன்னு பார்க்கிறோம்” எனமிரட்டி அடித்து துன்புறுத்திய சம்பவம் நடைபெற்று உள்ளது. கல்லூரி முதல்வரின் மேலாதிக்க பிராமணிய சிந்த னைக்கு ஆட்பட்டுள்ளார். இதற்கு சில பட்டியலினம் அல்லாத மாண வர்களும் உடந்தையாக இருந்து ள்ளார்கள். அதோடு மாணவரின் பெற்றோர்களை வரவைத்து அவர்களையும் அவமதித்து மாணவன் நெற்றியில் இருந்த குங்குமத்தை அவரின் தாயாரை விட்டு அழித்திருக்கிறார்கள். கல்லூரி முதல்வர் வேறொரு பெண் பேராசிரியரையும் காலில் விழ வைத்து ரசித்துள்ளதாக கூறப் படுகிறது. இந்த சம்பவங்கள் அனைத்தும் பிசிஆர் காவல் நிலைய பிரிவில் புகார் அளித்தும், சரியான நட வடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மாணவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர் சென்னை யில் இருக்கும் எஸ்.எஸ்டி ஆணை யத்தில் முறையிட்டுள்ளார். உரிய நடவடிக்கை இல்லாத சூழலில் நேஷனல் கமிஷனுக்கு புகார் அளித்து விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. புதுச்சேரி அரசு எஸ்.எஸ்டி ஆணையத்தின் கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி சிலர் மூலம் நீர்த்துப்போக செய்ய முயற்சி நடப்பதாக கேள்விப்படுகிறோம். பட்டியலின மாணவரை தாக்கி இழிவுபடுத்திய கல்லூரி முதல்வரை பாதுகாக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ள புதுச்சேரி அரசின் செயல் மிகவும் வருத்த மளிக்கிறது. இத்தகைய கொடுமை களை தாங்கிக் கொள்ள முடி யாத தலித் மாணவர்கள் கல்வி நிலையங்களில் இருந்து வெளி யேறும் நிலைக்கு இட்டுச் செல்லும். குற்றம் இழைத்த சாதிய வன்மை கொடுமையாளர்கள் அனைவரையும் எஸ்.எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்ய வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் தீண்டாமையும் சாதிய வன்முறை யும் தலை தூக்காமல் இருக்க நல்லிணக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது.