tamilnadu

img

ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்தரங்கம்

ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்தரங்கம்

புதுச்சேரி, ஜூலை 23 - இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை கேப்டன் லட்சுமி சேகலின் நினைவு தினத்தை யொட்டி ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்தரங்கம்  புதுச்சேரி முல்லை நகரில் உள்ள அரசு ஊழியர் சம்மேளனத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி மாநில நகர தலைவர் கே.லலி தாம்பிகை தலைமை தாங்கினார்.இதில்,  சிஐடியு முன்னாள் செயலாளர் வெ.பெரு மாள் கலந்துகொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பின் முக்கியத்துவம் குறித்து  பேசினார். சிஐடியு மாநிலச் செயலாளர் என்.பிரபுராஜ் கலந்துகொண்டு கேப்டன் லட்சுமிசேகலின் தியாகங்களை நினை வுபடுத்தி பேசினார். மாதர் சங்கத்தின் மாநில  நிர்வாகிகள் சத்தியா, மாரிமுத்து, உமா சாந்தி, நகர கமிட்டி செயலாளர் ஜானகி, பொருளாளர் நேத்ராவதி உள்ளிட்ட திரளான பெண்கள் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக இந்திய தேசிய ராணு வத்தில் பணியாற்றிய விடுதலைப் போராட்ட  வீராங்கனை கேப்டன் லட்சுமியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை  செலுத்தப்பட்டது.