tamilnadu

img

அண்ணா உயிரியல் பூங்காவில் பயிற்சி முகாம்

சென்னை, மே 26-அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பல்வேறுமுறைகளில் பூங்காப் பள்ளி மூலம் வனஉயிரின பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கும் மற்றும் பள்ளி மாணவர்களுக்கும் அளித்து வருகிறது. தற்போது இப்பூங்கா பள்ளியில் சிறப்பு முகாமாக“பறவைகளும், பறவைகளை இனம் காணுதலும்” என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.  முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முகாமின் களப்பயிற்சியாக பூங்காவினுள் அழைத்துச் சென்று பறவைகளை நேரடியாக இனம் மற்றும் அடையாளம் காணும் பயிற்சி வழங்கப்பட்டது. பூங்கா பள்ளியில் பறவைகளை எவ்வாறு இனம் கண்டறிதல் மற்றும் அது தொடர்பான பல்வேறு நுணுக்கங்களை தெரிந்து கொள்ளும் முறைகள் மற்றும் நேரடியாக எவ்வாறு களப்பதிவேடு செய்தல் போன்ற விபரங்கள் அளிக்கப்பட்டது. முகாமில்பங்கு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கபட்டன.