அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஆர்ஓ பொறுப்பேற்பு
சிதம்பரம், ஆக. 11- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய சம்பத் பணி நிறைவு பெற்றதால், பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய என். சுரேஷ் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டார். மக்கள் தொடர்பு அலுவலகத்தில் திங்கட்கிழமை (ஆக.11) பொறுப்பேற்றுக் கொண்ட இவர், பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் அருட்செல்வி, பதிவாளர் பிரகாஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் வாழ்த்துக்களைப் பெற்றார். இவருக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், நண்பர்கள் என அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.