tamilnadu

img

அண்ணாமலைப் பல்கலை.யில் பண்டிகை முன்பணம் கோரி ஊழியர்கள் போராட்டம்

அண்ணாமலைப் பல்கலை.யில் பண்டிகை முன்பணம் கோரி  ஊழியர்கள் போராட்டம்

சிதம்பரம், அக்.17- அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் என்.எம்.ஆர் மற்றும் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடைபெற்றது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை குறைந்த ஊதி யத்தில் 400-க்கும் மேற்பட்ட என்.எம்.ஆர் மற்றும் தொகுப்பூதிய ஊழியர்கள் பணி யாற்றி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்த முன்பணம் இவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. நிதி அலுவலர் அரசு ஒப்புதல் வழங்க முடியாது என தெரி வித்துள்ளார். இதனையடுத்து பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலக வாயிலில் என்.எம்.ஆர் ஊழியர் சங்கம் மற்றும் ஆசிரியர், ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் ரவி, ஆசிரியர் சங்க தலைவர் சி.சுப்பிரமணியன், செல்வராஜ், என்.எம்.ஆர் ஊழியர் சங்க நிர்வாகிகள் ராஜா, மாதர் சங்க சிதம்பரம் நகர செயலாளர் அமுதா, இந்திய மாணவர் சங்கத்தின் நகர செயலாளர் பூபதி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனை அறிந்த பல்கலைக்கழக துணை வேந்தர் குழு உறுப்பினர் அறிவுடைய நம்பி, பதிவாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் போராட்டக்காரர்களிடம் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி, உயர்கல்வித்துறை அதி காரிகளின் அனுமதி பெற்று முன்பணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். இதே கோரிக்கையை வலி யுறுத்தி சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.