tamilnadu

மோடியின் தமிழ்ப் பாசம், அண்ணாமலையின் பிஞ்ச செருப்பு எல்லாமே நாடகம்!

‘இந்தித் திணிப்பு எதிர்ப்பை  பிஞ்சு போன செருப்பு’ என்றும், ‘திமுக இன்னும் அந்த செருப்பை தூக்கி எறியவில்லை’ என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை வாய்க்கொழுப்பாக பேசி யிருப்பதற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் 70 பேர் தங்களின் உயிரைத் தியாகம் செய்த நிலையில், அந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய அண்ணா மலை மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அந்த வகையில், அண்ணா மலைக்கு பூவுலகின் நண்பர்  கள் அமைப்பைச் சேர்ந்த சுந் தர்ராஜனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “பிரதமர் மோடி தன்னால் தமிழ் பேச முடியவில்லையே  என வருத்தப்படுவதாக இங்கு  வரும்போது சொல்கிறார்.

 ஆனால், பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலை, தமிழ் மொழிக்காக நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை  பிஞ்ச செருப்பு என்கிறார். திட்ட மிட்ட நாடகத்தை நடத்துகின்ற னர். பிரதமர் மோடி இங்கு  வரும்போதும், வெளிநாடுகளி லும் தமிழ் பற்றி உயர்வாகப் பேசுகிறார்.

ஆனால், இங்  கேயே இருக்கும் அண்ணா மலை கேவலமாகப் பேசு கிறார். சந்தர்ப்பத்திற்கு தகுந்த வாறு, பாஜகவினர் மாறிக் கொள்வார்கள்.  பிஞ்ச செருப்பு என்று நாங்கள் சிலவற்றை தூக்கிப் போட்டதால் தான் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் 2-ஆவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாடு கொடுக்கும் வரி யால் தான், இந்தியைத் தூக்  கிச் சுமக்கும் உத்தரப் பிர தேசத்தில் சாலைகள் போடப் படுகின்றன.”  இவ்வாறு சுந்தர்ராஜன் பேசியுள்ளார்.