tamilnadu

img

தேர்தல் ஆணையத்தை கண்டித்து கடலூரில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்

தேர்தல் ஆணையத்தை கண்டித்து கடலூரில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்

கடலூர், ஆக.26- பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கி யதை கண்டித்தும், தேர்தல் ஆணையத் தின் தவறான நடவடிக்கையால் மக்களின் வாக்குரிமையை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதை கண்டித்தும், கொல்லைப் புற வழியாக என்.ஆர்.சி யை அமல்படுத்த ஒன்றிய அரசு முயற்சிப்பதை கண்டித்து அனைத்து கட்சி சார்பாக ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாத வன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் திமுக மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா, காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் ஏ.எஸ்.சந்திரசேகரன், விசிகதுணை மேயர் தாமரைச்செல்வன், மாநில அமைப்பு செய லாளர்  தி.ச.திருமார்பன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், செயற்குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ் கண்ணன், பழ.வாஞ்சிநாதன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எஸ்.கே.பக்கிரான், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் வி.குளோப், வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,மமக மாவட்டச் செயலாளர் ரஹிம், மக்கள் நீதி மையம் மாவட்டச் செயலாளர் மூர்த்தி, மக்கள் அதி காரம் மாவட்டச் செயலாளர் பாலு, ரவிச்சந்தி ரன், குடியிருப்போர் சங்க பொதுச் செய லாளர் பி.வெங்கடேசன், சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், காங்கிரஸ் மீனவர் அணி தலைவர் கார்த்திகேயன், நிர்வாகிகள் பாண்டுரங்கன், அன்பழகன், தி.க. சுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.