அகில இந்தியகைப்பந்து: ஐசிஎப் மகளிர் சாம்பியன்
46ஆவது அகில இந்திய ரயில்வே மகளிர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், ஐசிஎப் மகளிர் கைப்பந்து அணி இறுதிப் போட்டியில் கிழக்கு ரயில்வேயை மூன்று செட்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு ஐ.சி.எப்.பொது மேலாளர் யு.சுப்பாராவ் பரிசுகளை வழங்கி பாராட்டினார். கிழக்கு ரயில்வே 2ஆம் இடத்தையும், தெற்கு ரயில்வே 3ஆம் இடத்தையும் பிடித்தன.
