tamilnadu

பாஜகவின் பிளவுபடுத்தும் நோக்கத்தை சிபிஎம் அனுமதிக்காது வண்ணையில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

சென்னை, பிப். 19- குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டை லாலா  குண்டாவில் நடைபெற்று வரும் மாபெரும் மக்கள் போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் புதனன்று (பிப்.19) பேசினார். மக்களை பிளவுபடுத்தும் இந்த மோசமான சட் டத்தை கேரளாவில் பின ராய் தலைமையிலான அரசு  எதிர்க்கட்சியை இணைத்துக் கொண்டு சட்டமன்றத்தில் இச்சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றிவிட்டது. குடி யுரிமை சட்டத்திற்கு எதிராக வரலாற்றுச்சிறப்பு மிக்க 640 கி.மீ மனிதச்சங்கிலி  போராட்டத்தை வெற்றிகர மாக நடத்தியும் விட்டது.   14 மாநிலங்களில் இந்த சட்டத்தை ஏற்கமுடியாது என  அடித்துவிட்டது. டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந் தது. இது குடியுரிமை சட்டத்திற்கு கிடைத்த தோல்வி. என்.பி.ஆர் நடத்தி னாலே குடியுரிமை சட்டத்தை  அமலானதாக அர்த்தம். அமித்ஷா தேசிய மக்கள் கணக்கெடுப்பில் 21 கேள்வி  கேட்கப்படும். அதில் பெற் றோர் பிறந்த ஊர் , தேதி கேட்கப்படும். குடிபெயர்ந்த தொழிலாளிகளுக்குப் பிறந்த தேதி ஆவணம் இருக்க வாய்ப்பில்லை. இதனால் அவர்கள் சந்தேகத்திற்குப் பிரஜையாக  அறிவிக்கப் பட்டு முகாமில் அடைக்கும் நிலைவரும். அசாமில் இதற்கு ஏராள மான உதாரணங்கள் உள் ளன. ஆகவே நாங்கள் இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்லப்போவதில்லை என  முடிவெடுக்கவேண்டும். பாஜகவின் பிளவுபடுத்தும் நோக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி அனு மதிக்காது அதனைப் புறக்க ணிக்கும். மராட்டியம் , ஜார்கண்ட், ராஜஸ்தான், ஹரியான உள்  ளிட்ட பாஜக ஆளும் மாநி லங்களில் கூட இந்த சட்டத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜகவை மதம் கடந்து இனம் கடந்து இந்திய மக்கள் ஒன்றிணைந்து புறக்கணிப்பார்கள். இவ்வாறு ஜி.ராம கிருஷ்ணன் பேசினார்.

;