tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திண்டுக்கல்: விதி மீறி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
தேர்தல் அதிகாரிகளிடம் சிபிஎம் புகார்

திண்டுக்கல், ஏப்.18- மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் புதனன்று மாலை 6 மணியோடு நிறைவடைந்த நிலையில் வியாழனன்று மாலை அதிமுக வேட்பாளர் நெல்லை முபாரக் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகரன் ஆகி யோர் திண்டுக்கல் ஒன்றிய கிராமங்க ளான பெரியகோட்டை மாமு கோவிலூர்  உள்ளிட்ட பல கிராமங்களில் வீதி வீதி யாக சென்று வாக்கு சேகரித்துள்ளனர்.

இதற்கு அப்பகுதியில் இருந்த திமுக, சிபிஎம் மற்றும் ‘இந்தியா’ கூட்  டணி தலைவர்கள் இதற்கு கடும் ஆட்  சேபணை தெரிவித்தனர். மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மாரியப்பன், திண்டுக்கல்  ஒன்றியச் செயலாளர் சரத்குமார் உள் ளிட்டோர் தேர்தல் அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்துள்ளனர்.

சிபிஎம் வேட்பாளர் ஆர். சச்சிதானந்த மும் தேர்தல் அதிகாரிகளிடம் அலை பேசியிலும் புகார் கொடுத்துள்ளார். மேலும் தேர்தல் ஆணையத்திலும் புகார்  கொடுத்துள்ளார். “உடனடியாக அதி முகவின் இந்த பிரச்சாரத்தை தடுத்து  நிறுத்த வேண்டும்; அவர்கள் மீது தேர்  தல் நடத்தை விதிமுறைகளின்படி நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆர். சச்சிதானந்தம் வலியுறுத்தியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதிமாறன் அவதூறு வழக்கு!

சென்னை, ஏப்.18- “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவிகி தத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்  பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப்  பார்க்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி விமர்சித்திருந்தார்.

இதற்கு எதிராக தயாநிதி மாறன்  எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்  தில் வியாழனன்று அவதூறு வழக்கு  தொடர்ந்துள்ளார். “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என  சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதி முக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனி சாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்  உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

;