tamilnadu

img

புதிய மோட்டார் வாகனச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இன்று 45 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தம்

சென்னை:
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகனச்சட்டத்திற்கு எதிராகவும்  அபராதத்தொகையை குறைக்க வலியுறுத்தியும், லாரி தொழிலை அரசு பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 19 அன்று நாடுமுழுவதும்  லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.இந்த வேலைநிறுத்த போராட்டத்தை அனைத்திந்திய மோட்டார்டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்து ள்ளது. இப்போராட்டத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.இதுகுறித்து லாரி உரிமை யாளர்கள் கூறுகையில், சாலை விதிமுறை மீறல்களுக்கு விதிக்கப் பட்டுள்ள அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், செப்டம்பர் ஆகிய மாதங்களில் தமிழகத்தில் உள்ள 43 சுங்கச்சாவடிகளில் 10 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை ரத்து செய்ய வேண்டும். வேலைநிறுத்தப் போராட்டத்தில் இந்தியா முழுவதும் 45 லட்சம் லாரிகளும் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகளும் ஓடாது என்று தெரிவித்தனர்.

;