கூடுதல் மின் விளக்குள் பொருத்த கோரிக்கை
நாமக்கல், ஆக.22- பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே கூடுதல் மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் முக்கியப் பகுதியாக உள்ளது. காலை துவங்கி இரவு வரை பல்லாயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள், அரசு, தனியார் பேருந்துகள் இவ்வழியே சென்று வருகின்றன. நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால், அடிக்கடி போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தில் இருந்து திருச்செங்கோடு சாலையில் உள்ள ஆலாம்பாளை யம் வரை சுமார் மூன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மேம்பாலம் அமைக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதன் காரணமாக கணிசமான அள வில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ள நிலையில், மேம்பாலத்தின் கீழே பல்வேறு இடங்களில் மின் விளக்கு கள் நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிபாளையம் நான்கு ரோடு பிரதான சாலை அருகே போதுமான மின்விளக்கு பொருத்தப்படாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வளைவில் திரும்பும் போதும் எதிர்வரும் வாகனங்கள் தெரியாத நிலை இருப்பதால், கூடு தல் மின்விளக்குகளை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.