tamilnadu

img

நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம்

காரில் கருப்பு கண்ணாடி ஒட்டிய விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20-ம் தேதி சென்னை - பனையூரில் அமைந்துள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தன் ரசிகர்களை நடிகர் விஜய் சந்தித்தார். அந்தச் சந்திப்பு முடிந்த பிறகு அங்கிருந்து அவர் சென்றார். அதனை ரசிகர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அதில் தான் அவர் வந்த காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அதனை கவனித்த பலரும் அதுகுறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். அதையடுத்து, காவல்துறையினர் நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்