tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆதீனத்துக்கு மிரட்டல் 
பாஜக நிர்வாகிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி!

சென்னை, ஏப்.27- தருமபுரம் ஆதீ னம் தொடர்புடைய ஆபாச வீடியோ இருப்பதாக கூறி  மிரட்டல் விடுத்த புகா ரில் பாஜக நிர்வாகி அகோரம் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில்  அகோரம், குடியரசு ஆகியோரின் ஜாமீன் மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா ளர் வினோத், முன்னாள் ஒன்றிய செய லாளர் விக்னேஷ் ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இவர்களின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னையில் பிடிபட்ட ரூ.4 கோடி
நயினார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

சென்னை, ஏப்.27- தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத் தப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில்,  கடந்த ஏப்ரல் 6 அன்று 4 கோடி ரூபாய் பணத்துடன் 3 பேர் பிடிபட்டனர். 

சதீஷ், நவீன் மற்றும் பெருமாள் ஆகிய இந்த மூவரும் திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் தாங்கள் வேலை பார்ப்பதாகவும், அவரின் உத்தரவின் பேரில், நயினாருக்குச் சொந்தமான சென்னை புளூ டைமண்ட் ஹோட்டலிலி ருந்து இந்த பணத்தை தேர்தல் செல வுக்காக நெல்லைக்கு எடுத்துச் சென்ற தாகவும் வாக்குமூலம் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தாம்பரம் போலீசார், நயினாரின் உற வினர்கள், பாஜக நிர்வாகி கோவர்த்தன் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 சம்மன்களை அனுப்பியுள்ளனர். 

இதற்கிடையே இவ்வழக்கின் விசா ரணையை சிபிசிஐடிக்கு மாற்றும்படி தாம்பரம் மாநகர காவல்துறை ஆணை யர் அமல்ராஜ், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று, இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி, தமிழ்நாடு காவல்துறை தலை வர் உத்தரவிட்டுள்ளார்.

சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை துவங்க நீதிமன்றம் உத்தரவு!
சென்னை, ஏப்.27- தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களி லும் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்  பணியை ஜூன் மாதம் முதல் துவங்க வேண்டும் என  தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாது காப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்ப டையில் சென்னை உயர் நீதிமன்றம், 2018 ஆம்  ஆண்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.  இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயணன் பிரசாத் அமர்வில் வெள்ளியன்று (ஏப்.26) மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில்,  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சதுப்பு நிலங்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  

இதையடுத்து, ஜூன் மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை அடை யாளம் காணும் பணியை மேற்கொள்ள வேண்டும் என  தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சதுப்பு நிலங்  களை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும்  அறிவுறுத்தினர்.

மேலும், மாவட்டங்களில் உள்ள சதுப்பு நிலங்களை  அடையாளம் காணும் பணி குறித்து அவ்வப்போது  அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இப்பணிகளுக்கு நிபுணர்களின் சேவையைப் பயன்  படுத்திக் கொள்ள அரசுக்கு அனுமதி அளித்து, வழக்  கின் விசாரணையை ஜூலை முதல் வாரத்திற்கு நீதிபதி கள் தள்ளி வைத்தனர்.

காலை உணவுத் திட்ட
முன்னோடி தியாகராயர்!
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

சென்னை, ஏப்.27- நீதிக் கட்சியின் நிறுவனர் சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னு டைய ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில், “பார்ப்பன ரல்லாதார் கொள்கைப் பிரகடனம் வெளி யிட்டு திராவிட இனத்தின் உரிமைக் குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற  அரசியல் வாழ்வில் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்  கும் மக்கள் தொண்டர்! காலை உணவுத்  திட்டத்தின் முன்னோடி! தேடி வந்த பதவி யை மறுத்த மாண்பாளர் - நம் வெள்ளுடை  வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்!” என்று கூறியுள்ளார்.

மே 6 முதல் உயர்கல்வி வழிகாட்டி முகாம்
சென்னை, ஏப்.27- தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ உயர் கல்வி வழிகாட்டி திட்டத்தின் மூலம்,  2022-2023ஆம் கல்வியாண்டில் 12-ஆம்  வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 3 லட்சத்து  99 ஆயிரத்து 938 அரசுப் பள்ளி மாண வர்களில், 2 லட்சத்து 41 ஆயிரத்து 177 (60  சதவிகிதம்) மாணவர்கள், பல்வேறு உயர்  கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்று  உயர்கல்வி பயின்று வருவது UMIS  (University Management Information System) மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள் ளது. அந்த வகையில், 2023-2024 கல்வி யாண்டிலும் தமிழ்நாட்டில் உள்ள அரசுப்  பள்ளிகளில் மே 6 முதல் ‘நான் முதல்வன்  திட்டத்தின்’ கீழ் உயர்கல்வி வழிகாட்டி முகாம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்  துறை அறிவித்துள்ளது.

‘நீட்’ தேர்வு மையங்கள் விவரம் வெளியீடு
சென்னை, ஏப்.27- 2024-25 ஆம் கல்வியாண்டு இளநிலை  மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக் கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு மே 5 அன்று  நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன்  விண்ணப்பப் பதிவு, கடந்த பிப்ரவரி 9 துவங்கி ஏப்ரல் 10 வரை நடைபெற்றது. தேர்வுக்கு 23 லட்சத்துக்கும் அதிகமா னோர் விண்ணப்பித்துள்ளனர். 

இந்நிலையில், நடப்பாண்டில் நீட்  தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர் களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ள தேர்வு மையம், இடம், நகரம் குறித்த விவரங்களை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் அதன் விவரங்களை, www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.

;