tamilnadu

கடலூரில் அஞ்சலைக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்.... சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு....

சென்னை:
மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் உள்ளிட்டோருக்கு திருவுருவச் சிலைகள் அமைக்கப்படும் என, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் செய்தித்துறை குறித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்,“விடுதலைக்காகப் போராடிய தியாகிகள், மொழிப் போர்த் தியாகிகள், தலைசிறந்த இலக்கியப் படைப்பாளிகள், சமூக நீதிக்காகப் போராடியவர்கள், குடியரசு முன்னாள் தலைவர், திராவிட இயக்க முன்னோடிகள் ஆகியோரைப் போற்றும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருவுருவச் சிலைகள் நிறுவப்படும் என்று கூறியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-
நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகள் மொழிப் போர் தியாகிகள் தலைசிறந்த இலக்கிய படைப்பாளிகள் சமூக நீதிக்காக போராடியவர்கள் முன் னாள் குடியரசுத்தலைவர் திராவிட இயக்க முன்னோடிகள் ஆகியோரை போற்றும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருஉருவச் சிலை நிறுவப் படும்.

கட்டபொம்மன்- மருது சகோதரர்கள்

அதன்படி, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய டபொம்மன், சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதரர்களுக்கும் சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திரு உருவ சிலை அமைக் கப்படும்.

அப்துல்கலாம்
மொழிப்போரில் முதன் முதலில் உயிர் தியாகம் செய்த கீழப் பழுவூர் சின்னசாமிக்கு அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரிலும், சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர், சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகையில் நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோருக்கு சிலை நிறுவப்படும்.அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை வைக்கப்படும்.பெண் சமூக சீர்திருத்தவாதிஎழுத்தாளர் தேவதாசி ஒழிப்புஇயக்க முன்னோடிகள் ராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடு துறையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு புதுக்கோட்டையிலும் தமிழறிஞர் டாக்டர் மு வரதராசனாருக்கு ராணிப்பேட்டையில் உம் திரு உருவச் சிலைகள் அமைக்கப்படும்.

நினைவு மண்டபங்கள்
சென்னை காந்தி மண்டப வளாகத்தில் உள்ள காந்தி மண்டபம், அருங்காட்சியகம், ராஜாஜி, பக்தவத்சலம் ஆகியோரது நினைவு மண்டங்கள் ரூபாய் 3 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.முன்னாள் முதல்வருக்கு சிலைசமூக நீதிக் கோட்பாடுகளுக்காகச் சட்டவடிவம் கொடுத்தவரும் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த பா.சுப்பராயனுக்கு சென்னையில் முழுத்திருவுருவச் சிலை அமைக்கப்படும். நாமக்கல் நகரில் அவரது பெயரில் ஓர் அரங்கமும் அமைக்கப்படும்.முன்னாள் அமைச்சரும் மறைந்த தலைவருமான ஏ.கோவிந்தசாமிக்கு விழுப்புரம் மாவட்டத்தில் திருவுருவச் சிலை, அரங்கம் ஒன்று அமைத்து கொடுக்கப்படும்.

அஞ்சலை அம்மாள்!
தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைக்கப்பட்டவரும் சுதந்திரப்போராட்ட வீராங் கனையுமான அஞ்சலை அம்மாளுக்கு கடலூரில் சிலை அமைக் கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.அஞ்சலை அம்மாளுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று 2014 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும் இன்றைய மாநிலச் செயலாளருமான கே. பாலகிருஷ் ணன் கோரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து, நடப்பு கூட்டத்தொடரில் பேசிய பேரா.நாகநாதனின் மகனும் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான மருத்துவர் எழிலன், செங்கற்பட்டு தொகுதி திமுக பெண் உறுப்பினர் வரலட்சுமியும் இதே கோரிக் கையை முன்வைத்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.

;