tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நவாஸ் கனி மீண்டும் போட்டி
திமுக தலைமையிலான மதச்சார் பற்ற கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இராம நாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், தற்போதைய எம்.பி. நவாஸ் கனியே இராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் ‘ஏணி’ சின்னத்தில் போட்டியிடுவார் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மோடி அரசைத் தூக்கியெறிவோம்! கு.செல்வப்பெருந்தகை அறிக்கை

நிதிப் பகிர்வில், தமிழகத்தை வஞ்சிக் கும் மோடி அரசைத் தோற்கடிப்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல் வப்பெருந்தகை அறிக்கை வெளி யிட்டுள்ளார்.

“தமிழ்நாடு உட்பட ஆந்திரா, கேரளம், தெலுங் கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 25 கோடி. ஆனால், ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூ. 21,755 கோடி. 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிர தேச மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட (ரூ. 25,495 கோடி)தொகையில் 89 சதவிகி தம்தான் தென் மாநிலங்களுக்கு ஒதுக் கப்பட்டிருக்கிறது. அரசியல் உள்நோக் கத்தோடு தென் மாநிலங்களை பாஜக வஞ்சித்து வருவதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.