tamilnadu

img

8ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.60 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலை!

சென்னையிலுள்ள தேசிய மாணவர் படை அலுவலகத்தில் (என்சிசி) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரங்கள்:

பணி: அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

வயது வரம்பு: 18 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஓட்டுநர் (Driver)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

வயது வரம்பு:18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://cms.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Commanding Officer,

TNBTY NCC NO-28,

Dr.Alagappa Road, Sethu House Annexe, Purasaiwakkam, Chennai-600 084.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 16.6.2023