tamilnadu

தேர்தலில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு அனுமதி

சென்னை, மார்ச் 28- தமிழ்நாடு - புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், 640 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

இதில் இந்தியா கூட்டணியில் உள்ள திமுக, சிபிஎம், சிபிஐ கட்சிகள் சார்பில் தலா 40 பேச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். சிபிஎம் அகில இந்திய தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, பிர காஷ் காரத், மாணிக் சர்க்கார், சுபாஷினி அலி, அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன், மூத்தத் தலைவர்கள் டி.கே. ரங்கராஜன், ஏ.கே. பத்மநாபன், அ. சவுந்தரராசன், மத்தியக் குழு உறுப்பி னர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம், ஆர். கருமலையான்,  மாநில செயற்குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டா லின், மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா உள்பட 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்  கட்சிகள் சார்பில் தலா 20 பேர் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டிய லில் இடம் பெற்றுள்ளனர். அதிமுக, தேதிமுக, பாஜக உள்ளிட்ட  கட்சிகளும் தங்கள் கட்சிகளின் 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டி யலை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி ஒப்புதல் பெற்றுள்ளது.

பாஜக பேச்சாளராக மாறிய ஓபிஎஸ் - டிடிவி
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி. நட்டா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஓ. பன்னீர்  செல்வம், டிடிவி தினகரன், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராம தாஸ் ஆகியோர் பாஜக-வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில்  சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 29 கட்சிகளைச் சேர்ந்த 640  பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.