tamilnadu

தமிழகத்தில் 519 சுரங்கப்பாதை, 155 மேம்பாலம் அமைப்பு தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் 519 சுரங்கப்பாதை, 155 மேம்பாலம் அமைப்பு தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை, செப்.14-  ரயில்வே தண்டவாளங்கள் உள்ள பகுதி களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடந்து செல்லும்போது பாது காப்பாக செல்வதற்காகவும், போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் ரயில்வே சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த வசதிகள் இல்லாத இடங்க ளில் பொதுமக்கள், வாகனங்கள் தண்ட வாளங்களை கடந்து செல்லும்போது பல இடங்களில் அவ்வப்போது விபத்து நடந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் மோதியது. இதில் 2 மாணவர்கள்  உயி ரிழந்த சம்பவம் அரங்கேறியது. இந்த விபத்துக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதே ஆகும். எனவே, இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. எந்தெந்த இடங்களில் மக்கள் அதிகமாக தண்ட வாளங்களை கடந்து செல்கின்றனர்? தண்ட வாளம் உள்ள பகுதியில் எங்கெங்கு போக்கு வரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது? என்பதை கருத்தில் கொண்டு இந்தியா முழுவதும் புதிய பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்தியா முழுவதும் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் 4 ஆயிரத்து 148 ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை யில் 10 ஆண்டுகளில் 13 ஆயிரத்து 426 மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வேயில் கடந்த 10 ஆண்டுகளில் 600 சுரங்கப்பாதைகளும், 270 மேம்பாலங்களும் அமைக்கப் பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் 519 ரயில்வே சுரங்கப்பாதைகளும், 155 ரயில்வே மேம்பாலங்களும் என மொத்தம் 674 பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.