tamilnadu

மருத்துவ மேற்படிப்பில் 508 இடங்கள் அதிகரிப்பு

சென்னை, மே 29-மருத்துவ மேற்படிப்பில் தமிழகத்தில் 508 இடங்கள் அதிகரிக் கப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.மாதவிடாய் சுகாதார நாளை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு, 5 ரூபாய் செலுத்தினால் நாப்கின் வரும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தினார்கள்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜய பாஸ் கர், எம்பிபிஎஸ் படிப்பில் நடப்பு ஆண்டில் 350 இடங்கள் அதிகரிக்கப்பட்டு 1350 ஆக உயர்ந்துள் ளது என்றும் அவர் தெரிவித்தார்.