சென்னை,ஏப்.20- மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, அபூர்வ வகை சிவப்பு காது ஆமை குஞ்சுகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.கடத்தல் ஆசாமி சுங்கச் சோதனைக்கு பயந்து, ஆமை குஞ்சுகள் இருந்த,2 சூட்கேஸ்களை, விமான நிலை யத்தில் விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதை அடுத்து அந்த 5,000 ஆமை குஞ்சுகளையும், மலேசியா நாட்டிற்கு திருப்பி அனுப்ப, சென்னை விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இதை அடுத்து ஒன்றிய வன உயிரின பாதுகாப்பு குற்ற பிரிவினர், சென்னை விமான நிலையத்திற்கு வந்து, விசாரணை மேற்கொண்டனர்.
இதை அடுத்து ஒன்றிய வன உயிரின பாதுகாப்பு குற்றப் பிரிவு அதிகாரிகள், இந்த ஆமைக் குஞ்சுகள் மூலம் வெளிநாட்டு நோய்க்கிருமிகள், இந்தியாவில் பரவிவிடும். எனவே இவைகளை எந்த விமானத்தில் வந்ததோ? அதே விமானத்தில் வந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இதை அடுத்து சனிக்கிழமையன்று நள்ளிரவு சென்னையில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லும், பாட்டிக் பயணிகள் ஏர்லைன்ஸ் பயணிகள், விமானத்தில் இந்த அபூர்வகை ஆமை குஞ்சுகளை, மலேசியாவுக்கு திருப்பி அனுப்ப சுங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.