tamilnadu

img

தமிழகத்தில் 40 அரசு பள்ளிகள் மூடல் - ஆர்டிஐ தகவல்!  

கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் 40 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் தெரிவித்துள்ளது.  

இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால், சேர்க்கை நடைபெறாத 40 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  

மேலும் 669 தொடக்கப்பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் பயின்று வரக்கூடிய விவரங்களும் வெளியாகியுள்ளது. தனியார் பள்ளிகளின் மீதான ஆர்வம் அதிகரித்து மாணவர்கள் அரசு பள்ளிகளிலிருந்து வெளியேறியுள்ளதை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் புள்ளிவிவரங்கள் எடுத்துரைக்கின்றன.  

இந்த நிலையில், தமிழகத்தில் 40 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும், 22 தொடக்கப்பள்ளிகள், 18 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மூடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.  

அதிகபட்சமாக நீலகிரி, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் தலா 5 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

அதேபோல் திண்டுக்கல், தேவகோட்டை மாவட்டங்களில் தலா 4 பள்ளிகளும், லால்குடி, வேலூர், திருவாரூர் பகுதிகளில் தலா ஒரு 2 பள்ளிகளும் நாட்றாம்பள்ளி, தட்டால கொளத்தூர், திருவள்ளூர் உள்ளிட்ட 11 இடங்களில் தலா ஒரு பள்ளிகளும் மூடு விழா கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

;