போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு முழுவதும் 22 மையங்களில் 33 நாட்களாக போக்குவரத்து மற்றும் ஓய்வூதியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வெள்ளியன்று (செப்.19) தமிழ்நாடு முழுவதும் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக தென்சென்னை மாவட்டம் சார்பில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவர் ஏ.முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஜி.செந்தில்குமார், பொருளாளர் ஏ.நடராஜன், நிர்வாகிகள் வெல்கின், விஜயா, ஆர்.துரை உள்ளிட்டோர் பேசினர்.
