எண்ணூர், ஜூன் 7- எண்ணூர், காசி விசாலாட்சி புரம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (32), இவரது வீட்டில் வியாழனன்று இரவு, மர்ம நபர்கள் ஜன்னல் வழியாக கைவிட்டு, 2 செல்போன், ரூ, 4 ஆயி ரம் ஆகியவற்றை திருடினர், இதை போன்று அதே பகுதி ராஜீவ் காந்தி நகரில் வசிப்பவர் ஷீபா. இவரின் கணவர் வெளி யில் சென்றிருந்தார், அவரின் மனைவி ஷீபா, மேல் தளத்தில் இருந்ததாக தெரிகிறது. கீழே வீட்டின் கதவை உடைத்து, தொலைக்காட்சி பெட்டி, 9 சவரன் நகை, ரூ, 6 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை கொள்ளை யடித்து சென்று விட்டனர். இதேபோன்று சக்திபுரத்தில் ஒரு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது, இந்த மூன்று சம்ப வங்களிலும் ஒரே நபர்கள் ஈடுபட்டிருக்கலாம என போலீ சார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடங்களில் கண்காணிப்பு கேமிரா பதிவு களை வைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஒரே நாளில், எண்ணூர் பகுதியில்அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
செயினை பறிக்கமுயற்சி
இதனிடையே வெள்ளியன்று திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் கள் தங்க செயினை பறிக்க முயன்றனர். அப்போது இருவரும் கீழே விழுந்து பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.