தாராபுரம், ஜூலை 3 – தாராபுரத்தில் தொடர்ந்து நாய்க்கடிக்கு குள்ளாய்பாளையத்தில் மேலும் 3 ஆடுகள் பலியாகியுள்ளது. தாராபுரம் அடுத்த குள்ளாய்பாளை யத்தை சேர்ந்தவர் விவசாயி அர்ச்சுனன். இவருக்கு கால்நடைத்துறை சார்பில் வழங்கப்பட்ட 3 விலையில்லா ஆடுகளை வளர்த்து வருகிறார். செவ்வாயன்று இரவு வழக்கம்போல் ஆடுகளை மேய்த்துவிட்டு பட்டியில் அடைத்து விட்டு சென்றுள்ளார். வழக்கம் போல் புதனன்று காலையில் வந்து பார்த்தபோது நாய் கடித்து 3 ஆடுகள் இறந்துகிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சி யடைந்த அர்ச்சுனன் கால்நடைத்துறை யினருக்கு தகவல் அளித்தார். இதுகுறித்து விவசாயி அர்ச்சுனன் கூறுகையில், தாராபுரம் பகுதியில் நாய்க் கடிக்கு ஆடுகள் பலியாவது தொடர்ந்து வருகிறது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய்களை கட்டுப்படுத்த வேண்டு மென தெரிவித்தார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய்க்கடிக்கு ஆடுகள் பலியாவதை தடுக்க நடவடிக்கை எடுக் கக்கோரி துணை ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் அப்பகுதி யினர் மனு அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது.