ஏரியில் விளையாடிய 3 சிறுவர்கள் பலி
அரக்கோணம், ஜூலை 14- அரக்கோணம் அருகே ஏரியில் விளை யாடிய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் மேட்டு குன்னத்தூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே உள்ள கிராமம் மேட்டு குன்னத்தூர். இந்த ஊரைச் சேர்ந்த சரவணன் மகன் புவனேஸ்வரன் (7), அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.இதே ஊரைச் சேர்ந்த கோபியின் மகன் மோனி பிரசாத்(9), அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இவரது தம்பி புஜன் (7) அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடு முறை நாள் என்பதால் மூன்று சிறுவர்களும் குன்னத்தூர் ஏரியில் விளையாடச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மூன்று சிறுவர்களும் நீரில் மூழ்கி யுள்ளனர். நீரில் மூழ்கிய சிறுவர்களை கிராமத்தினர் மீட்டு பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இச்சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூவருமே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். மூன்று பேரின் சடலங்களும் உடற்கூறு பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இச்சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழுத்தில் புடவை இறுகி மாணவன் பலி
சென்னை, ஜூலை 14- திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர் பேட்டை அருகே, கீழ் நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன், போட்டோ கிராபர். இவருக்கு பிரேம லட்சுமி (16) என்ற மகளும், கிரண் (14) என்ற மகனும் உள்ள னர். இதில் சிறுவன் கிரண் திருத்தணியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். ஞாயிறன்று நாகராஜன் அவரது மனைவி ஜோதியுடன் உறவினர் வீட்டு திருமணத் திற்கு சென்றிருந்தார். அப்போதும், வீட்டின் வரண்டாவில் கொக்கியில் புடவையால் ஊஞ்சல் கட்டி சிறுவன் கிரண் விளையாடிக் கொண்டிருந் தான். கிரணின் கழுத்தில் சிக்கிக்கொண்டது. இதில் புடவை இறுகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கிரணை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.