tamilnadu

img

கரூர் சம்பவம் குறித்து வதந்தி – 25 பேர் மீது வழக்குப்பதிவு

கரூர் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூரில் நடந்த தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். 57 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பொதுமக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்பினால் கைது நடவடிக்கை உறுதி எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.